Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பயணியர் விடுதி கட்டுவதற்கான இடம்: கலெக்டர் ஆய்வு

பயணியர் விடுதி கட்டுவதற்கான இடம்: கலெக்டர் ஆய்வு

பயணியர் விடுதி கட்டுவதற்கான இடம்: கலெக்டர் ஆய்வு

பயணியர் விடுதி கட்டுவதற்கான இடம்: கலெக்டர் ஆய்வு

ADDED : ஜூலை 09, 2024 11:30 PM


Google News
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி கட்டுவதற்கான இடத்தை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

உளுந்துார்பேட்டையில் புதியதாக நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்பேரில் பயணியர் விடுதி கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிக்காக கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உளுநதுார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே மற்றும் நகராட்சி அலுவலகம் புதியதாக அமைந்துள்ள கட்டட பகுதி அருகே உள்ள இடங்களை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுக்காக நடந்த கண்சிகிச்சை முகாமினை பார்வையிட்டார்.

பின்னர் வட்டார வளர்ச்சி பகல் நேர பராமரிப்பு மையத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் உடல் இயக்க ஆதரவு ஆயத்த பயிற்சிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுது குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், தாசில்தார் விஜய பிரபாகரன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, நகராட்சி துணை சேர்மன் வைத்தியநாதன், நகராட்சி கவுன்சிலர் கலா சுந்தரமூர்த்தி, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us