/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 11:30 PM

திருக்கோவிலுார் : மத்திய அரசின் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, திருக்கோவிலுார் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் மாற்றப்பட்டு, பாரதிய நியாய சங்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷாசன்ஹித், பாரதிய சாக் ஷியா சட்டம் என்ற மூன்று புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சந்தப்பேட்டை அஞ்சல் துறை அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு அமைப்பு துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் ராஜபாண்டியன், செல்வராஜ், ராமதாஸ், வீரச்சந்திரன், மூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேசினர். இதில் வழக்கறிஞர்கள் பலரும் பங்கேற்றனர்.