/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காவல் நிலையத்திலிருந்து தப்பிய சாராய வியாபாரி கைது காவல் நிலையத்திலிருந்து தப்பிய சாராய வியாபாரி கைது
காவல் நிலையத்திலிருந்து தப்பிய சாராய வியாபாரி கைது
காவல் நிலையத்திலிருந்து தப்பிய சாராய வியாபாரி கைது
காவல் நிலையத்திலிருந்து தப்பிய சாராய வியாபாரி கைது
ADDED : ஜூன் 30, 2024 06:05 AM

சங்கராபுரம், : சங்கராபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு தப்பியோடிய சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன், 50; சாராய வியாபாரி. இவரை விசாரணைக்காக கடந்த 27ம் தேதி சங்கராபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
நீதி மன்ற காவலுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல் நிலையத்தில் இருந்து, மணிகண்டன் தப்பியோடினார்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், சேஷசமுத்திரம் கிராமத்தில் ஏரிக்கரை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.