ADDED : ஜூன் 30, 2024 05:33 AM

சின்னசேலம் : அரசு அனைத்து ஓய்வூதியர் சங்க ஆலோசனைக் கூட்டம் சின்னசேலத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, வட்ட தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கேசவ ராமானுஜம், பொருளாளர் பாஸ்கரன், வட்ட துணைத் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். ஜெயபாலன் வரவேற்றார். மாவட்ட தலைவர் மோகன் சிறப்புரையாற்றினார்.
துணைத் தலைவர் கிருஷ்ணசாமி வட்ட நிர்வாகிகள் சுப்ரமணியன், ராமச்சந்திரன், துரைமணி, ஆனந்த கிருஷ்ணன், முத்துசாமி, மனுவேல், சாந்தி, ஜேக்கப் செல்வராஜ், அன்பழகன், ராமமூர்த்தி, கோலக்காரன், தங்கவேலு, மலர்அடியான், முருகவேல், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மறைந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சராயம் குடிந்து இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் நன்றி கூறினார்.