/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்திற்கு கும்பாபிஷேகம் ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்திற்கு கும்பாபிஷேகம்
ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்திற்கு கும்பாபிஷேகம்
ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்திற்கு கும்பாபிஷேகம்
ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்திற்கு கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 09, 2024 03:56 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவன மகா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.
திருக்கோவிலுார், குடமுருட்டி அடுத்த ஸ்ரீ ஞானானந்த தபோவனம் என்ற ஆசிரமத்தை நிறுவி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கியவர் ஞானானந்தகிரி சுவாமிகள்.
இவரது அதிஷ்டானம் மற்றும் பல்வேறு சன்னதிகள் அடங்கிய பழமையான இத்தபோவனம், 12 ஆண்டுகளுக்குப்பின் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.
விழாவையாட்டி, வரும் 12ம் தேதி காலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. 16ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, கடம் புறப்பாடாகி, 6:30 மணிக்குமேல் ராஜகோபுரம், ஞானபுரீஸ்வரர் முதல் அனைத்து மூர்த்திகளுக்கும் மற்றும் ஞானானந்த மகாலிங்கம், மணி மண்டபங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் மாலை பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் புதல்வர் ரங்கன்ஜியின் உபன்யாசம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.