ADDED : ஜூலை 04, 2024 12:30 AM

சின்னசேலம் : டேக்வோண்டா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, சின்னசேலத்தில் பாராட்டு விழா நடந்தது.
சேலத்தில் ஓபன் நேஷனல் டேக்வோண்டா தேசிய அளவிலான போட்டி நடந்தது. இப்போட்டியில், சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவி பிரியதர்ஷினி, 46 கிலோ எடை பிரிவு போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.
இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் விஜயகுமார் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பாராட்டினார்.