/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 04, 2024 12:29 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே முன் விரோத தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 43; அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் வினோத், 30; இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் ராமச்சந்திரனின் தம்பி மாரியப்பன், 35; வினோத் வீட்டின் எதிரே தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை வினோத் மற்றும் அவரது அண்ணன்கள் பிரகாஷ், 41; கபிலன், 36; ஆகியோர் மாரியப்பனை தாக்கினர்.
காயம் அடைந்த மாரியப்பன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், வினோத், பிரகாஷ், கபிலன் ஆகியோர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.