Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கஸ்துாரிபா காந்தி பள்ளி விண்ணப்பங்கள் வரவேற்பு

கஸ்துாரிபா காந்தி பள்ளி விண்ணப்பங்கள் வரவேற்பு

கஸ்துாரிபா காந்தி பள்ளி விண்ணப்பங்கள் வரவேற்பு

கஸ்துாரிபா காந்தி பள்ளி விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூன் 16, 2024 11:38 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளிகளை நிர்வகிக்க அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் உடனான கருத்துருக்களும் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

அரசு சாரா தொண்டு நிறுவனர்கள் மூலம், மாவட்டத்தில் 13 கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளிகள் நிர்வகிக்கப்படுகிறது. இதில், கள்ளக்குறிச்சி ஒன்றியம், புக்கிரவாரி, பெரிய சிறுவத்துார், தியாகதுருகம் ஒன்றியம் முடியனுார், பல்லகச்சேரி, திருநாவலுார் ஒன்றியம் சேந்தநாடு, திருநாவலுார் ஆகிய 6 கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்க, அனுபவமிக்க, பெண் கல்வியில் ஆர்வமுள்ள, பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விதிமுறைப்படியும், தொண்டு நிறுவனங்களின் இணைய தளத்திலும் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பெண் கல்வி சேவையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். அதற்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும். தொண்டு நிறுவனத்தின் மீது எவ்வித புகாரும் இருக்க கூடாது. கலெக்டர் மற்றும் தமிழக அரசால் ஏற்கனவே முடக்கப்பட்டிருக்க கூடாது. 3 ஆண்டுகள் வரவு, செலவு தணிக்கை செய்த விபரம் இணைக்க வேண்டும்.

தகுதியுள்ள தொண்டு நிறுவனங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு மையத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் கருத்துருகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலகம், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில், கள்ளக்குறிச்சி-606 202 என்ற முகவரிக்கு வரும் 24ம் தேதி மாலை 5:00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். அதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us