ADDED : ஜூன் 05, 2024 12:11 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு நகர செயலாளர், நகரமன்ற சேர்மன் சுப்ராயலு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நகர் மன்ற துணை சேர்மன் சமீம்பானு அப்துல்ரசாக் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதிகள் சதீஷ்குமார், செந்தில், விஜயலட்சுமி, நகர அவைத் தலைவர் அப்துல்கலீல், நகர துணை செயலாளர்கள் நீதி அன்பு, அபுபக்கர், கவுன்சிலர்கள் கேசவன், பாத்திமா அபுபக்கர், விமலா விஜய்மனோஜ், செல்வம், ரமேஷ், உமா வெங்கடேசன், கலைச்செல்வன், அஸ்வின்குமார் மற்றும் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.