ADDED : ஜூன் 05, 2024 12:12 AM

கள்ளக்குறிச்சி: கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இப்பள்ளியில், கடந்த 1990-2023ம் கல்வி ஆண்டு வரை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களது பள்ளி பருவத்தின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியில் தரத்தை மேம்படுத்துவதற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வது என அனைவரும் தீர்மானித்தனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் சேகர், செந்தில், சங்கர், மணி, அன்புரோஸ், மாரிமுத்து, பிரபாகரன் ஒருங்கிணைத்தனர்.
விழாவில், தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உட்பட 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.