/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஜமாபந்தி நிறைவு விழா; 39 பேருக்கு பட்டா வழங்கல் ஜமாபந்தி நிறைவு விழா; 39 பேருக்கு பட்டா வழங்கல்
ஜமாபந்தி நிறைவு விழா; 39 பேருக்கு பட்டா வழங்கல்
ஜமாபந்தி நிறைவு விழா; 39 பேருக்கு பட்டா வழங்கல்
ஜமாபந்தி நிறைவு விழா; 39 பேருக்கு பட்டா வழங்கல்
ADDED : ஜூன் 19, 2024 11:04 PM

கள்ளக்குறிச்சி : சங்கராபுரத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. 12 மற்றும் 13ம் தேதி ஆலத்துார் குறுவட்டத்திற்கும், 14 மற்றும் 18ம் தேதி சங்கராபுரம் குறுவட்டத்திற்கும் ஜமாபந்தி நடந்தது. தாலுகாவிற்குட்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உட்பட வருவாய்த்துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமை தாங்கினார். சங்கராபுரம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கடந்த 4 நாட்களாக நடந்த ஜமாபந்தியில், 433 மனுக்கள் பெறப்பட்டது. அதில், 39 நபர்களுக்கு நேற்று பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 394 மனுக்கள் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் நடராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சத்தியநாராயணன், தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலை, மண்டல துணை தாசில்தார் ராமசாமி, வட்ட துணை ஆய்வாளர் பால்திலகர், தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், வட்ட வழங்கல் அலுவலர் தனவேல் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,கள் கலந்து கொண்டனர்.