/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர் சேர்க்கையில் முறைகேடு பொதுமக்கள் சாலை மறியல் மாணவர் சேர்க்கையில் முறைகேடு பொதுமக்கள் சாலை மறியல்
மாணவர் சேர்க்கையில் முறைகேடு பொதுமக்கள் சாலை மறியல்
மாணவர் சேர்க்கையில் முறைகேடு பொதுமக்கள் சாலை மறியல்
மாணவர் சேர்க்கையில் முறைகேடு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 08, 2024 04:15 AM
கள்ளக்குறிச்சி : விருகாவூர் மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு இருப்பதாக புகார் தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளியில், ஒரு வகுப்பில் 80 மாணவ, மாணவிகளை மட்டுமே சேர்க்க முடியும். 6ம் வகுப்பில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஏராளமான பெற்றோர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், 6 வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெயர் பள்ளியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 'சீட்' கிடைக்காத பெற்றோர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதற்கிடையே, பள்ளியில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே காலை 11:00 மணியளவில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில், காலை 11:10 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.