/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின் விபத்தில் உயிரிழப்பை தடுக்க ஆர்.சி.சி.பி., உபகரணம் பொருத்த அறிவுறுத்தல் மண்டல தலைமை பொறியாளர் தகவல் மின் விபத்தில் உயிரிழப்பை தடுக்க ஆர்.சி.சி.பி., உபகரணம் பொருத்த அறிவுறுத்தல் மண்டல தலைமை பொறியாளர் தகவல்
மின் விபத்தில் உயிரிழப்பை தடுக்க ஆர்.சி.சி.பி., உபகரணம் பொருத்த அறிவுறுத்தல் மண்டல தலைமை பொறியாளர் தகவல்
மின் விபத்தில் உயிரிழப்பை தடுக்க ஆர்.சி.சி.பி., உபகரணம் பொருத்த அறிவுறுத்தல் மண்டல தலைமை பொறியாளர் தகவல்
மின் விபத்தில் உயிரிழப்பை தடுக்க ஆர்.சி.சி.பி., உபகரணம் பொருத்த அறிவுறுத்தல் மண்டல தலைமை பொறியாளர் தகவல்
ADDED : ஜூலை 25, 2024 06:39 AM
கள்ளக்குறிச்சி: திருவண்ணாமலை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர்(பொ) பழனிராஜு செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் மின் விபத்துகளை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவ மழையை எதிர்கொள்ளும் பொருட்டு கடந்த 1ம் தேதி முதல் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் உள்ள பீங்கான் இன்சுலேட்டர்கள், தற்போது பாலிமர் இன்சுலேட்டர்களாக மாற்றப்பட்டு வருகிறது.
மின் நுகர்வோரின் அறியாமையால், சமீப காலமாக மின் விபத்துகள் காரணமாக இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு புதிய மின் இணைப்புகளில் ஆர்.சி.சி.பி., (ரெசிடியூல் கரண்ட் சர்க்யூட் பிரேக்கர்) என்ற உபகரணம் பொருத்தி மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்த ஆர்.சி.சி.பி .,உபகரணம் பொருத்திய மின் இணைப்பு வளாகத்தில், ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின்சாரம் துண்டிப்பாகி விடும். எனவே, மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழிப்புகளை தடுக்க, பழைய மின் இணைப்புகளில் ஆர்சிசிபி உபகரணம் பொருத்த வேண்டும்.
மேலும் வீடுகளில் உபயோகிக்கும் சிங்கிள் பேஸ் மின் சாதன உபகரணங்களான கிரைண்டர், மிக்சி, அயர்ன்பாக்ஸ், வாட்டர் பம்ப், ரெபிரிஜிரேட்டர், வாட்டர் ஹீட்டர் போன்ற அனைத்தும் மூன்று பின் சாக்கெட் மூலமே பொருத்த வேண்டும். இயற்கை சீற்றத்தின் போது மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கால்நடைகளை மின் கம்பம், இழுவை கம்பிகளில், மின் பாதைக்கு கீழோ கட்டக் கூடாது. ஈரமான கைகளால் மின்சுச்சுகளை பயன்படுத்த கூடாது. விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாது. பொதுமக்கள் தங்களின் மின் இணைப்புகளில் தரமான ஐ.எஸ்.ஐ ., முத்திரையிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.