/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வரும் முன் காப்போம் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு வரும் முன் காப்போம் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வரும் முன் காப்போம் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வரும் முன் காப்போம் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வரும் முன் காப்போம் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 25, 2024 06:39 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த உலகுடையாம்பட்டு கிராமத்தில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவமுகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் முக்கனுார் ஊராட்சியை சேர்ந்த உலகுடையாம்பட்டு கிராமத்தில் நடந்த வரும் முன் காப்போம் திட்ட முகாமிற்கு சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன் தலைமை தாங்கி முகாமை துவக்கிவைத்தார்.
ஊராட்சித் தலைவர் ஜெயகுமார் வரவேற்றார்.
ஒன்றிய குழுத் தலைவர் திலகவதி நாகராஜன், அட்மா குழுத் தலைவர் ஆறுமுகம்,சங்கராபுரம் பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் வரும் முன் காப்போம் திட்டம் பற்றி விளக்கி கூறினார்.
முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி., மனநலம், கண் பரிசோதனை, போன்ற பரிசோதனைகள் 250 பேருக்கு செய்யப்பட்டது.
முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் வள்ளி, பாசில், சதிஷ்பிரியன் பங்கேற்றனர்.