/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கேரி பேக்குகள் பயன்பாடு அதிகரிப்பு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கேரி பேக்குகள் பயன்பாடு அதிகரிப்பு
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கேரி பேக்குகள் பயன்பாடு அதிகரிப்பு
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கேரி பேக்குகள் பயன்பாடு அதிகரிப்பு
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கேரி பேக்குகள் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : ஜூலை 30, 2024 06:17 AM
கடந்த 2019ம் ஆண்டு 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள ஒருமுறை மட்டும் பயன்படுத்தும், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்தது.
எளிதில் மக்காத பிளாஸ்டிக் தாள்கள், தட்டு, தேநீர் மற்றும் தண்ணீர் கப், கேரி பேக், கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதலுக்கு தடை விதிக்கப்பட்டது. விலை மலிவாக இருப்பதால் காய்கறி, உணவகங்கள், பேக்கரி, இறைச்சி என அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்ததும், அனைத்து கடைகளிலும் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதனால் கடை உரிமையாளர்கள் துணி பை மற்றும் பேப்பரால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்த தொடங்கினர்.
ஆனால், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கள்ளக்குறிச்சியில் அதிகரித்துள்ளது.
பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் பொதுமக்கள் பாத்திரம், மஞ்சப்பை எடுத்து செல்வதில்லை. கடை உரிமையாளர்கள் துணி மற்றும் பேப்பரால் தயாரிக்கப்பட்ட பைகளுக்கு கூடுதல் விலை நிர்ணயித்தால் பொதுமக்கள் கொடுக்க மறுக்கின்றனர்.
இதனால், கடை உரிமையாளர்கள் வேறு வழியின்றி பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்துகின்றனர்.
எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் ஆங்காங்கே வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
மழைக் காலங்களில் தண்ணீரை மண்ணுக்குள் செல்ல விடாமல் பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்கின்றன. எனவே, சுற்று சூழல் மாசுபாடு கருதி பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் பைகளை எடுத்து செல்ல வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.-நமது நிருபர்-