/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கராபுரம் பெண்கள் பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு சங்கராபுரம் பெண்கள் பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
சங்கராபுரம் பெண்கள் பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
சங்கராபுரம் பெண்கள் பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
சங்கராபுரம் பெண்கள் பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
ADDED : ஜூலை 20, 2024 05:58 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 1.27 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக 6 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராஜலட்சுமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் செங்குட்டுவன், கமருதீன், பேருராட்சி சேர்மன் ரோஜாரமணி துரை தாகப்பிள்ளை, துணைச் சேர்மன் ஆஷா பீ முன்னிலை வகித்தனர்.
புதிய பள்ளி கட்டடத்தில், உதயசூரியன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, ஒன்றிய தலைவர் திலகவதி நாகராஜன், பரிதா, சசிகலா, இம்தியாஸ், கோவிந்தன், சிவா, முருகன், இதயதுல்லா, ரவி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.