/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது 15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது
15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது
15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது
15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது
ADDED : ஜூலை 21, 2024 07:53 AM

ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு அருகே குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பகண்டை கூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூரியா மற்றும் போலீசார் அத்தியூர் - ஜம்பை சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகொள்ளியூர் பெட்ரோல் பங்க் அருகே மொபட்டில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர், சங்கராபுரத்தைச் சேர்ந்த பழனி, 55; என்பதும், தனது மளிகைக் கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா கொண்டு சென்றதும் தெரியவந்தது.
உடன், பழனியை கைது செய்து, அவரிடமிருந்து 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.