/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ADDED : ஜூலை 06, 2024 04:22 AM
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரின் காவல் வரும் 18ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. .
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 65 பேர் இறந்தனர். இதுகுறித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராய வியாபாரிகள் கருணாபுரம் கோவிந்தராஜ் (எ) கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களில் 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து மீண்டும் சிறையில்அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட கருணாபுரம் தாமோதரன், மாதவச்சேதி ராமர், மடுகரை ஷாகுல் ஹமீது ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்றுடன்முடிந்தது.
அதனையொட்டி மூவரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்ரீராம், மூவரின் காவலை வரும் 18ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.