ADDED : ஜூலை 06, 2024 05:28 AM
ரிஷிவந்தியம்: நுாரோலை கிராமத்தில் தம்பியை தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் விஜயகுமார், 22; இவருடைய சகோதரர் பிரவீன்குமார், 24; இருவருக்குமிடையே பொது கடனை அடைப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று மீண்டும் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், தனது தம்பி விஜயகுமாரை ஹாலோபிளாக் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.