ADDED : ஜூன் 02, 2024 05:26 AM
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கெடார் பகுதியில் பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் சாராய ஊறல் மற்றும் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, 600 லிட்டர் சாராய ஊறல், 20 லிட்டர் சாராயம் ஆகியவற்றை அதே இடத்திலேயே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக, ஆறுமுகம் மகன் ரமேஷ் என்பவர் மீது கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.