/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி அரசு டெப்போ முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் வாயிற்கூட்டம் கள்ளக்குறிச்சி அரசு டெப்போ முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் வாயிற்கூட்டம்
கள்ளக்குறிச்சி அரசு டெப்போ முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் வாயிற்கூட்டம்
கள்ளக்குறிச்சி அரசு டெப்போ முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் வாயிற்கூட்டம்
கள்ளக்குறிச்சி அரசு டெப்போ முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் வாயிற்கூட்டம்
ADDED : ஜூன் 12, 2024 11:51 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு டெப்போ முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு டெப்போ முன்பு நடந்த வாயிற்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி டெப்போ-1 தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராஜாராம், பொதுசெயலாளர் ரகோத்தமன், பொருளாளர் சுந்தரபாண்டியன், துணைத் தலைவர்கள் மூர்த்தி, தெய்வீகன் முன்னிலை வகித்தனர்.
15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்குதல், வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடு வழங்குதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பணப்பலன் மற்றும் மருத்துவகாப்பீடு வழங்குதல், 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைத்தல், காண்ட்ரக்ட் முறையினை கைவிட்டு நிரந்தரமாக பணிக்கு ஆட்களை சேர்த்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை மற்றும் சின்னசேலம் டெப்போக்களின் முன்பு பட்டினி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.