/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மும்மொழி கொள்கையை கைவிடும் வரை தி.மு.க.,வின் போராட்டம் தொடரும் மும்மொழி கொள்கையை கைவிடும் வரை தி.மு.க.,வின் போராட்டம் தொடரும்
மும்மொழி கொள்கையை கைவிடும் வரை தி.மு.க.,வின் போராட்டம் தொடரும்
மும்மொழி கொள்கையை கைவிடும் வரை தி.மு.க.,வின் போராட்டம் தொடரும்
மும்மொழி கொள்கையை கைவிடும் வரை தி.மு.க.,வின் போராட்டம் தொடரும்
ADDED : மார் 14, 2025 07:39 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், பெருமாள், பாரதிதாசன், சத்தியமூர்த்தி, கனகராஜ், அண்ணாதுரை, துரைமுருகன், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகன், எத்திராஜ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார்.
தலைமை நிலைய பேச்சாளர் குத்தாலம் அன்பழகன், சிறுவானுார் பரசுராமன், நெய்வேலி தங்கம், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் பார்வையாளர் பெருநற்கிள்ளி கண்டன உரையாற்றினர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் பேசியதாவது :
இந்தியா முழுவதும் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் சிறந்த முறையில் சட்டத்தை பின்பற்றி ஆட்சி செய்தவர்களுக்கான தண்டனைதான் இந்த தொகுதி மறுவரையறை. தமிழக முதல்வர் கேட்பது சம பங்கீடு, சம உரிமை மட்டும்தான். தொகுதி மறுவரையறை மற்றும் மும்மொழி கொள்கையை கைவிடும் வரை தி.மு.க.,வின் தொடர் போராட்டங்கள் தொடரும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணை சேர்மன் தங்கம், ஒன்றிய சேர்மன்கள் அஞ்சலாட்சி , தாமோதரன், வடிவுக்கரசி, பேரூராட்சி சேர்மன் ரேவதி ், துணை சேர்மன் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி நகர்மன்ற துணை சேர்மன் ஷமீம்பானு நன்றி கூறினார்.