/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தி.மு.க.,அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம் தி.மு.க.,அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க.,அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க.,அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க.,அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 07:53 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அ.ம.மு.க., சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். தலைமைக் கழக பேச்சாளர் இளங்கோ கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு நிர்வாகத்தின் தோல்விகளை மறைக்க வரிகளையும், மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் மீது சுமைகளை ஏற்றும் தி.மு.க., அரசை கண்டித்து பேசினர்.
ஜெ., பேரவைச் செயலாளர் பால்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர் மதுசூதனன், சிறுபான்மை பிரிவு பரத், நகர செயலாளர்கள் ராம்குமார், மாரிக்கண்ணு, சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.