ADDED : ஜூலை 08, 2024 05:06 AM
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே மணல் கடத்திய வழக்கில் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு மாட்டுவண்டியில் மணல் கடத்தி மாரனோடை பகுதிக்குச் சென்ற ராஜா, 39; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.