/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாதவச்சேரி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு மாதவச்சேரி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
மாதவச்சேரி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
மாதவச்சேரி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
மாதவச்சேரி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 23, 2024 10:53 PM

கச்சிராயபாளையம் : மாதவச்சேரி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் மாவட்ட கலக்டர் பிரசாந்த் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை பார்வையிட்டதுடன், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாதவச்சேரி கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற கலெக்டர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கற்றல் கற்பித்தல் முறை குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து தடிகாரன் கோவில் அருகில் என்.ஆர். ஜி., திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய குளத்தின் பணியினை நேரில் சென்று ஆய்வு செய்து பணியாளர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் மாதவச்சேரி கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தவர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தொகைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.