/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குட்கா விற்பனை 9 பேர் மீது வழக்கு குட்கா விற்பனை 9 பேர் மீது வழக்கு
குட்கா விற்பனை 9 பேர் மீது வழக்கு
குட்கா விற்பனை 9 பேர் மீது வழக்கு
குட்கா விற்பனை 9 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 18, 2024 05:22 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் குட்கா விற்பனை செய்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு, நேற்று முன்தினம் போலீசார் பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். அதில், கடைகளில் ஹான்ஸ் விற்பனை செய்த தொட்டியத்தை சேர்ந்த கணேசன், தாவடிப்பட்டை சேர்ந்த கலா, விளக்கூரை சேர்ந்த சையதுஅப்துல், மலைக்கோட்டாலத்தை சேர்ந்த கணேசன், முருகன், நைனார்பாளையத்தை சேர்ந்த இனயதுல்லா, சேராப்பட்டை சேர்ந்த சாமிநாதன், கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டை சேர்ந்த வேல்முருகன், முத்துக்குமார் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர்களிடமிருந்து 49 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.