ADDED : ஜூன் 19, 2024 11:06 PM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் பூட்டை ரோடில் வசிப்பவர் சாமிநாதன் மகன் ஏழுமலை, 43; சங்கராபுரத்தில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் டிரைவர் வேலை செய்கிறார். இவர் தனது ஹீரோ பேஷன் புரோ பைக்கை நேற்று முன் தினம் சங்கராபுரம் வி.ஏ.ஓ., அலுவலகம் பின்புறம் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். மதியம் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.