ADDED : ஜூலை 30, 2024 06:36 AM

சின்னசேலம்: சின்னசேலத்தில் சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு அஷ்டமி பூஜை நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக மற்றும் தீபாராதனையை கணேசர் குருக்கள் செய்து வைத்தார். தொடர்ந்து, சுவாமி உட்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் மாலை நடந்தது.
இதையொட்டி காலபைரவர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகமும் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.