/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 09, 2024 03:55 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் சமூக சேவகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு தமிழக முதல்வரால் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் ரொக்கப்பரிசு, தங்கபதக்கம், சான்றிதழ், சால்வை வழங்கப்படும்.
அதன்படி, நடப்பாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களும் விருது பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் மற்றும் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
மேலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் நபர்களும், சமூக சேவை நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்விருதுக்கு, தமிழக அரசின் விருதுகள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.