/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உடல் நலக்குறைவால் வெளி மாநிலத்தவர் சாவு உடல் நலக்குறைவால் வெளி மாநிலத்தவர் சாவு
உடல் நலக்குறைவால் வெளி மாநிலத்தவர் சாவு
உடல் நலக்குறைவால் வெளி மாநிலத்தவர் சாவு
உடல் நலக்குறைவால் வெளி மாநிலத்தவர் சாவு
ADDED : ஜூலை 16, 2024 07:17 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உடல் நலக்குறைவால் வெளி மாநில கூலித்தொழிலாளி இறந்தார்.
மேற்குவங்க மாநிலம், பாமல்கோலா தாலுகா, குருலா கிராமத்தைச் சேர்ந்தவர் சதுார்ேஹஷ் ராம் மகன் சஞ்சித்ேஹம் ராம், 28; இவரும், இவரது உறவினர்களும் ஒப்பந்த அடிப்படையில் நாகலுார் பகுதியில் தற்காலிகமாக தங்கி, புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 12ம் தேதி சஞ்சித்ேஹம் ராமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது உறவினர்கள் விருகாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து, நேற்று முன்தினமும் உடல்நிலை மோசமானதால் ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர், சஞ்சித்ேஹம் ராம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.