/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி
ADDED : ஜூலை 08, 2024 05:15 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி தனபாக்கியம், 65; இவர், நேற்று இரவு 7:30 மணியளவில் அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி நோக்கிச் சென்ற கார், தனபாக்கியம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதால் வேகத்தடை அமைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதனம் செய்து கலைந்து 8:00 மணியளவில் கலைந்து போகச் செய்தனர்.