/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குண்டும், குழியுமான தார்சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை குண்டும், குழியுமான தார்சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை
குண்டும், குழியுமான தார்சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை
குண்டும், குழியுமான தார்சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை
குண்டும், குழியுமான தார்சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 23, 2024 11:30 PM

ரிஷிவந்தியம், : மையனுார் மற்றும் பெரியபகண்டையில் உள்ள குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாணாபுரத்தில் தாலுகா மற்றும் பி.டி.ஓ., அலுவல கங்கள், வங்கிகள், போலீஸ் ஸ்டேஷன், எம்.எல்.ஏ., அலுவலகம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. வேளானந்தல், பள்ளிப்பட்டு, சூளாங்குறிச்சி, பழைய சிறுவங்கூர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிக்காக மையனுார் வழியாக வாணாபுரத்திற்கு தினமும் செல்கின்றனர்.
இதில், மையனுார் வனப்பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவிலான சாலை, பெரியபகண்டையில் இருந்து பகண்டைகூட்ரோடு வரையிலான 3 கி.மீ., சாலையின் பல்வேறு இடங்களில் தார் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பள்ளத்தை சீரமைக்க ஆங்காங்கே 'பேட்ச்' போடப்பட்டுள்ளது. ஆனாலும், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, பழைய சிறுவங்கூரில் இருந்து வாணாபுரம் செல்லும் தார் சாலையில் குண்டும், குழியுமாக உள்ள இடங்களை சரிசெய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.