Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

ADDED : ஜூன் 10, 2024 01:04 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் சாராயம், மதுபாட்டில் விற்றது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

அப்போது, பெருவங்கூரில் மதுபாட்டில் விற்ற மாயகண்ணன்,55; அந்தியூர் பெருமாள், 51; ஆகிய இருவரையும் கைது செய்து, தலா 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், வெள்ளிமலை முருகன் கோவில் அருகே இன்னாடு கிராமத்தைச் சேர்ந்த ரகு, 30; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 20 மதுபாட்டில்களை கரியாலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், மோ.வன்னஞ்சூரில் சாராயம் விற்று தப்பி ஓடிய அதே கிராமத்தை சேர்ந்த பொன்னன் மகன் வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிந்து, 5 லிட்டர் சாராயத்தை கள்ளக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.

காட்டனந்தலில் விற்பனை செய்த வெங்கடேசன் மனைவி சிவகாமி, 40; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us