/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தலைவாசலில் 3 நாட்கள் விவசாய கண்காட்சி தலைவாசலில் 3 நாட்கள் விவசாய கண்காட்சி
தலைவாசலில் 3 நாட்கள் விவசாய கண்காட்சி
தலைவாசலில் 3 நாட்கள் விவசாய கண்காட்சி
தலைவாசலில் 3 நாட்கள் விவசாய கண்காட்சி
ADDED : ஜூலை 23, 2024 11:16 PM
சங்கராபுரம்:: சின்னசேலம் அடுத்த தலைவாசலில் வரும் 26ம் தேதி முதல் 28 ம் தேதி வரை மூன்று நாட்கள் விவசாய கண்காட்சி நடக்கிறது.
சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் வரும் 26ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை 3 நாட்கள் விவசாய கண்காட்சி நடக்கிறது.
இதில் விதை முதல் விற்பனை வரை அனைத்து உபகரணங்கள் மற்றும் பால் பண்ணை கருவிகள், தீவனங்கள், மாடி தோட்டம் அமைத்தல், சோலார் பம்ப் செட், இயற்கை வேளாண் உற்பத்தி, இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திர பயன்பாடுகள், கால் நடை வளர்பில் உள்ள தொழில் நுட்பம், பால் பண்ணை அமைக்கும் முறை மற்றும் பல்வேறு தலைப்புகளில் விவசாய வல்லுனர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.
மேலும் நெல் கண்காட்சி,உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள் இடம் பெற உள்ளது.இந்த கண்காட்சியில் விவசாயிகள்,பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெருமாறு சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பலதா விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.