ADDED : ஜூன் 03, 2024 04:45 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் வெவ்வேறு இடங்களில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் கிராமத்தில் சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையத்தைச் சேர்ந்த முனியன் மகன் திருமலை, 54; என்பவர் சாராயம் விற்றது தெரிந்தது.
இதனையடுத்து திருமலையை கைது செய்து, அவரிடமிருந்த 20 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மேற்கொண்ட ரோந்து பணியின் போது, மண்மலை காலனி பகுதியில் சாராயம் விற்ற ஆறுமுகம் மனைவி சாந்தி, 37; என்பவரை கைது செய்து, 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.