Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

ADDED : ஜூன் 24, 2025 01:46 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.,) 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார்.

முதல்வர் விஜயலட்சுமி முன்னிலை வகித்து, 'யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல, மன அமைதி மற்றும் ஒழுக்கமான வாழ்வின் தழுவலாகும்' என்றார்.

நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் 'ஸ்வஸ்திக்' மற்றும் 'ஓம்' வடிவங்களில் அமர்ந்து, யோகாவின் ஆழமான சாட்சியாக தங்கள் ஒற்றுமை மற்றும் ஆன்மிக ஆழத்தை வெளிப்படுத்தினர். மாணவர்கள், உடல் மனம் மற்றும் ஆன்மாவின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் பிராணாயாம பயிற்சிகளிலும் பங்கேற்றனர்.

இதில், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு யோகா பயிற்சியாளர்கள் கோதை பாலவிநாயகம், கற்பகம், அபிராமி ஆகியோர் யோகாசனங்களை கற்றுக் கொடுத்தனர். அப்போது, ஒவ்வொரு ஆசனத்தின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு சரியாக செய்வது என்பது குறித்து, விளக்கமளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us