/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சித்தோடு சொசைட்டியில் இனி சனியில் மஞ்சள் ஏலம் சித்தோடு சொசைட்டியில் இனி சனியில் மஞ்சள் ஏலம்
சித்தோடு சொசைட்டியில் இனி சனியில் மஞ்சள் ஏலம்
சித்தோடு சொசைட்டியில் இனி சனியில் மஞ்சள் ஏலம்
சித்தோடு சொசைட்டியில் இனி சனியில் மஞ்சள் ஏலம்
ADDED : ஜூன் 20, 2025 01:28 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏலம், பெருந்துறை, ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், ஈரோடு, கோபி சொசைட்டிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் நடக்கிறது.
புதிதாக சித்தோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டு, ஏப்., 14 முதல் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் மஞ்சள் ஏலம் நடக்கிறது.
இங்கு வெள்ளி கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடந்தது. சனிக்கிழமைகளில் நடத்த விவசாயிகள் கோரினர். இதன்படி நாளை முதல் சனிக்கிழமை தோறும் மஞ்சள் ஏலம் நடக்கும். மஞ்சள் மூட்டைகளை கன்னிமார்காடு, நல்லாகவுண்டன்பாளையத்தில் செயல்படும் சித்தோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.