/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி டூவீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
டூவீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
டூவீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
டூவீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஜூன் 21, 2025 01:16 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம் முத்துாரை சேர்ந்தவர் கந்தவேல், 35; கூலி தொழிலாளி. முத்துார் அருகே ஹோண்டா பைக்கில் சென்றபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாடிய 30 பேர் கைது
வெள்ளகோவில், ஜூன் 21
வெள்ளகோவில், கல்லாங்காட்டுவலசு திருமங்கலம் ரோடு அருகே சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, வெள்ளகோவில் போலீசார் சென்றனர்.
இதில் கும்பலாக அமர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
தாராபுரம், காங்கேயம், சென்னிமலை மற்றும் கரூர், திருச்சி, பரமத்தி என பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ௨௪ வயது முதல் ௬௨ வயது வரையிலான, ௩௦ பேரை கைது செய்தனர். கும்பலிடம் இருந்து, 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.