/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேட்டைகாரன்புதுாரில் கால்நடை முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார் வேட்டைகாரன்புதுாரில் கால்நடை முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
வேட்டைகாரன்புதுாரில் கால்நடை முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
வேட்டைகாரன்புதுாரில் கால்நடை முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
வேட்டைகாரன்புதுாரில் கால்நடை முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
ADDED : ஜூன் 21, 2025 01:15 AM
காங்கேயம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம், காங்கேயம் அருகே பழையகோட்டை ஊராட்சி வேட்டைகாரன்புதுாரில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சிறு பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சை என மாடு, எருமை, ஆடுகள், கோழிகள் என, 850க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், காங்கயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கருணைபிரகாஷ்,
இளைஞரணி சக்தி வடிவேல், அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் அமைச்சர் பேசியதாவது: இந்த முகாம், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு, 12 முகாம் வீதம், 13 ஊராட்சி ஒன்றியங்களில், 156 முகாம் நடக்கவுள்ளது. காங்கேயம் தாலுகா கால்நடை மருத்துவமனை கட்டடம் கட்ட, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கிளை நிலையங்கள் அமைவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசினார்.