/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பவுனை லவட்டிய பெண்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பவுனை லவட்டிய பெண்
கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பவுனை லவட்டிய பெண்
கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பவுனை லவட்டிய பெண்
கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பவுனை லவட்டிய பெண்
ADDED : ஜூன் 08, 2025 12:52 AM
பு.புளியம்பட்டி, பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜெயலட்சுமி ஜுவல்லரி உள்ளது. சில தினங்களுக்கு முன் கடைக்கு நகை வாங்க கைக்குழந்தையுடன் ஒரு பெண் வந்தார். ஊழியர் நகைகளை காண்பித்தார்.
அப்போது ஒரு நகையை திருடி, பைக்குள் வைத்துக்கொண்டு, தான் கொண்டு வந்த கவரிங் நகையை அந்த இடத்தில் வைத்துவிட்டு, டிசைன் பிடிக்கவில்லை எனக்கூறி சென்று விட்டார்.
நகைகளை சரிபார்த்த போது மூன்று பவுன் தங்கச்சங்கிலுக்கு பதில், கவரிங் செயின் இருந்ததை கண்டு நகைக்கடை உரிமையாளர் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, குழந்தையுடன் வந்த பெண், திருடி சென்றது தெரிய வந்தது. புகாரின்படி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.