ADDED : ஜூலை 05, 2024 02:55 AM
ஈரோடு:ஈரோடு
மாநகரில் சில நாட்களாக வெயில் தாக்கம் குறைந்திருந்தாலும்,
புழுக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று மதியம், 3:45
மணியளவில் வானம் இருண்டது. சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
மாநகர பகுதி, பழையபாளையம், திண்டல், குமிலன் குட்டை, சோலார்,
கருங்கல்பாளையம், கனிராவுத்தர் குளம், சூளை, வில்லரசம்பட்டி,
சித்தோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 30 நிமிடங்கள் மழை பெய்தது.
சூறாவளி காற்றால் சாலையில் புழுதி பறந்ததால், வாகன ஓட்டிகள்
அவதிப்பட்டனர். பரவலான மழைக்கு வெப்பம் தணிந்து, புழுக்கமும்
குறைந்தது.
* அந்தியூர், தவிட்டுப்பாளையம், சந்திபாளையம்,
வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், வேம்பத்தி, புதுமேட்டூர்,
பச்சாம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம் பகுதிகளில், நேற்று
மதியம் அரை மணி நேரம் லேசான சாரல் மழை பெய்தது.