/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயத்தில் மனைவி கொலை கொல்கத்தாவில் கணவன் கைது காங்கேயத்தில் மனைவி கொலை கொல்கத்தாவில் கணவன் கைது
காங்கேயத்தில் மனைவி கொலை கொல்கத்தாவில் கணவன் கைது
காங்கேயத்தில் மனைவி கொலை கொல்கத்தாவில் கணவன் கைது
காங்கேயத்தில் மனைவி கொலை கொல்கத்தாவில் கணவன் கைது
ADDED : செப் 23, 2025 01:42 AM
காங்கேயம், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த கவுரங்க மண்டல், 37; காங்கேயத்தில் படியாண்டிபாளையம் கணேஷ் நகரில் மூன்று மாதங்களாக தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். மூன்று நாட்களுக்கு முன் கவுரங்கா மண்டலின் மனைவி ரிங்கு மண்டல், 31, காங்கேயம் வந்து கணவருடன் தங்கினார். அப்போது ஏற்பட்ட தகராறில் கடந்த, 18ம் தேதி மனைவியை கட்டையால் அடித்து கொன்று, இரவோடு இரவாக தலைமறைவாகினார்.
காங்கேயம் போலீசார் தேடிய நிலையில், சொந்த மாநிலத்துக்கு சென்றது தெரிய வந்தது. மேற்கு வங்காளம் சென்ற காங்கேயம் போலீசார், ரயில் நிலையத்தில் தங்கியிருந்த கவுரங்கா மண்டலை மடக்கி பிடித்தனர். காங்கேயம் அழைத்து வந்த போலீசார், காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மனஸ்தாபத்தால் ஆறு மாதத்துக்கு முன்பு இருவரும், விவாகரத்து கோரி பரஸ்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இதனால் ரிங்கு மண்டல் மேற்கு வங்காளத்தில் மற்றொரு நபருடன் வாழ்ந்து வந்தார். அவருடனும் பிரச்னை ஏற்படவே, தமிழகத்தில் இருந்த கணவரை தேடி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கவுரங்கா, மனைவியை கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.