/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கணவருடன் கருத்து வேறுபாடு மனைவி துாக்கில் தற்கொலை கணவருடன் கருத்து வேறுபாடு மனைவி துாக்கில் தற்கொலை
கணவருடன் கருத்து வேறுபாடு மனைவி துாக்கில் தற்கொலை
கணவருடன் கருத்து வேறுபாடு மனைவி துாக்கில் தற்கொலை
கணவருடன் கருத்து வேறுபாடு மனைவி துாக்கில் தற்கொலை
ADDED : ஜூன் 14, 2025 07:05 AM
ஈரோடு: ஈரோடு, முள்ளம்பட்டி, அலமேடு பகுதியை சேர்ந்த தம்பதி சந்-திரன் -
சந்தோஷினி. இவர்களுக்கு எட்டு வயதில் மகன் உள்ளார். கணவ-னுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டாக, திண்டலில் உள்ள தாயார் சுமதியுடன், சந்தோஷினி வசித்து வந்தார்.
அவ்வப்போது திண்டலுக்கு வந்து மனைவி, மகனை சந்திரன் பார்த்து செல்வாராம். சில நாட்களாக உறவினர்களை அழைத்து வந்து, சமாதானம் பேசியுள்ளார்.
ஓரிரு நாளில் அலமேட்டில் உள்ள வீட்டுக்கு அழைத்து போகவும் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சந்தோஷினிக்கு விருப்ப-மில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து தாய்-மகளிடையே நேற்று முன்தினம் இரவு
பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இந்நிலையில் நள்ளிரவில் துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.