/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி நகராட்சி கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம் பவானி நகராட்சி கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பவானி நகராட்சி கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பவானி நகராட்சி கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பவானி நகராட்சி கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜூன் 14, 2025 07:06 AM
பவானி: பவானி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சிந்துாரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி புது, பழைய பஸ் ஸ்டாண்ட், செல்லியாண்டி அம்மன் மார்க்கெட் கடைகள், மீன் மார்க்கெட் குத்தகை தொகையை, 3 ஆண்டுகளுக்கு, ௫ சதவீதம் உயர்த்தி கொள்ள தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது. நகராட்சி பகுதியில் உள்ள, 33 பொது கழிப்பி-டங்களை பராமரிப்பு செய்ய, 4.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நீரேற்றும் நிலையம் அருகே மத்-திய அரசுக்கு சொந்தமான வருமான
வரித்துறை கட்டடம் கட்டப்படுகிறது.
இதனால் நீரேற்று நிலையத்துக்கு பாதுகாப்பு வேலி அமைத்துக் கொள்ள தேவையான நிதியை பயன்படுத்தலாம் என்பது உள்பட, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.