/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை மந்தம் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
ADDED : ஜூன் 11, 2025 01:39 AM
ஈரோடு, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், அதை சுற்றிய பகுதிகளில் வாரச்சந்தை கடைகள், மணிக்கூண்டு சாலை, டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காந்திஜி சாலை பனியன் மார்க்கெட் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை ஜவுளி சந்தை நடந்தது.
விற்பனை குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள் குறைந்த எண்ணிக்கையில் வந்தனர். தற்போது பண்டிகை சீசன் இல்லை என்பதாலும், முகூர்த்த சீசன் குறைவாக உள்ளதாலும், அதுபோன்ற ஆர்டர் குறைவாகவே இருந்தது. இவ்வாறு கூறினர்.