Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கூட்ஸ் ஷெட்டில் எடைபோடும் நிலையம் அமைப்பு மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்பு

கூட்ஸ் ஷெட்டில் எடைபோடும் நிலையம் அமைப்பு மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்பு

கூட்ஸ் ஷெட்டில் எடைபோடும் நிலையம் அமைப்பு மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்பு

கூட்ஸ் ஷெட்டில் எடைபோடும் நிலையம் அமைப்பு மாநகரில் நெரிசல் குறைய வாய்ப்பு

ADDED : செப் 13, 2025 01:30 AM


Google News
ஈரோடு, ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கூட்ஸ் ஷெட்டில் எடை போடும் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

ஈரோடு கூட்ஸ் ஷெட்டிற்கு நெல், அரிசி, சிமெண்ட் மூட்டைகள், மக்காசோளம், உரங்கள், மைதா மாவு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கூட்ஸ் ரயிலில் வருகிறது. இவற்றை சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றுகின்றனர். லாரிகள் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள எடை போடும் நிலையத்தில் எடை போட்ட பின் கிளம்பி செல்கின்றன.

கூட்ஸ் ஷெட்டில் இருந்து கிளம்பும் லாரிகள், எடை போடுவதற்காக சாலையோரம் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கூட்ஸ் ஷெட்டை வேறிடத்துக்கு மாற்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால் இப்பிரச்னைக்கு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூட்ஸ் ஷெட்டை மாற்றாமல் இருக்கும் அதே வேளையில் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் வழி கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி கூட்ஸ் ஷெட் வளாகத்தில் புதிதாக எடை போடும் நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்தப்பணி, 15 நாட்களுக்குள் நிறைவு பெற உள்ளது. லாரிகளில் மூட்டைகளை ஏற்றி முடித்தவுடன் எடை போட்டு பார்த்த பின் லாரிகள் மாநகரில் எங்கும் நிற்காமல் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்படும்.

ரயில்வே நிர்வாகம் எடை போடும் நிலையம் அமைக்கும் இடத்தை வாடகைக்கு தனியாருக்கு விட்டுள்ளது. இட வாடகையை அந்நிறுவனம் வேண்டும். ஐந்தாண்டுகள் வரை எடை போடும் நிலையம் வைத்து கொள்ளலாம்.

அதன் பின் ஒப்பந்தத்தை புதுப்பித்து கொள்ளலாம். கூட்ஸ் ஷெட் வளாகத்திலேயே அனைத்து வகை ஆவணங்களையும் தயார் செய்து எடை போட்டு கிளியரன்ஸ் சான்று வாங்கி லாரியை ஓட்டி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல் கூட்ஸ் ஷெட்களில் எடை போடும் நிலையம் அமைக்க அகம் குரூப் என்ற தனியார், ரயில்வேயில் அனுமதி பெற்றுள்ளனர்.

ரயில்வே கூட்ஸ் ஷெட் வளாகத்திலேயே லாரிகள் எடை போட்ட பின் மாநகரில் எங்கும் நிற்காமல் பயணத்தை தொடர்வதால், வரும் நாட்களில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் குறையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us