/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொங்கு கல்லுாரியில் மாநில தகவல் தொழில் நுட்ப விழா கொங்கு கல்லுாரியில் மாநில தகவல் தொழில் நுட்ப விழா
கொங்கு கல்லுாரியில் மாநில தகவல் தொழில் நுட்ப விழா
கொங்கு கல்லுாரியில் மாநில தகவல் தொழில் நுட்ப விழா
கொங்கு கல்லுாரியில் மாநில தகவல் தொழில் நுட்ப விழா
ADDED : செப் 13, 2025 01:29 AM
ஈரோடு, ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான தகவல் தொழில் நுட்ப விழா நேற்று நடந்தது. கல்லுாரி இளநிலை கணினி அறிவியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்றார்.கல்லுாரி தாளாளர் சச்சிதானந்தன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கோவையை சேர்ந்த உடனடி தகவல் தொழில் நுட்ப நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சங்கர்ராஜ் சுப்ரமணியன், சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சமூக ஊடகங்களை பெண்கள் கையாளும் முறை, செயலிகளில் பண பரிவர்த்தனை குறித்து விளக்கினார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வுக் கட்டுரை வாசித்தல், வினாடி-வினா பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பெருந்துறை தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் துணைத்தலைவர் வெங்கடாசலம் பரிசு வழங்கினார். ஈரோடு வேளாளர் மகளிர் கலை கல்லுாரி மாணவியர் முதல் பரிசு வென்றனர்.