வ.உ.சி., மைதானத்தில் அதிகாரிகள் ஆய்வு
வ.உ.சி., மைதானத்தில் அதிகாரிகள் ஆய்வு
வ.உ.சி., மைதானத்தில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், கேலோ இந்தியா ப்ராஜக்ட் மானிட்டர் அதிகாரிகள் ஆய்வு மேற்-கொண்டனர்.
ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில் கூடைப்-பந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி ஆகியவை விளையாடுவதற்கு தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. தடகள போட்டிக-ளான ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகியவை விளையாடுவதற்கும் இடவசதிகள் உள்ளன. இங்கு மாணவி கள் விளையாட்டு விடுதியும் செயல்பட்டு வருகி-றது.விளையாட்டு மைதானத்தில், ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளம் (சிந்தட்டிக் பைபர்) அமைக்கும் பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது, 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கேலோ இந்தியா ப்ராஜக்ட் மானிட்டர் அதிகாரிகள், செயற்கை இழை ஓடுதளத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மைதானத்தின் தரம் குறித்து பரிசோதித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்-குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.