/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அதிவேக பஸ் இயக்கம்: டிரைவருக்கு அபராதம்அதிவேக பஸ் இயக்கம்: டிரைவருக்கு அபராதம்
அதிவேக பஸ் இயக்கம்: டிரைவருக்கு அபராதம்
அதிவேக பஸ் இயக்கம்: டிரைவருக்கு அபராதம்
அதிவேக பஸ் இயக்கம்: டிரைவருக்கு அபராதம்
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சக்திவேல்-விஷ்ணு பிரியா தம்பதியினர், கைகுழந்தையுடன் பள்ளிபாளையம் நோக்கி நேற்று மாலை டூவீலரில் கே.என்.கே.
சாலையில் சென்று கொண்டிருந்-தனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நோக்கி கிருஷ்ணா என்ற தனியார் பஸ் வேகமாக வந்தது. தனக்கு முன் சென்ற இரு அரசு பஸ்களை முந்தி செல்ல முயன்று, டூவீ-லரில் மோதுவது போல் செல்ல முற்பட்டது. சக்திவேல் சுதாரித்து நின்றார். பஸ் ஸ்டாண்ட் நோக்கி பஸ் செல்வதை பார்த்தார். தன் குடும்பத்தினர் மீது மோதுவது போல் வந்ததால், ஆத்திரம-டைந்து பஸ் ஸ்டாண்டில் அந்த தனியார் பஸ்சின் குறுக்கே, தனது டூவீலரை நிறுத்தி புறப்பட விடாமல் வாக்குவாதத்தில் ஈடு-பட்டார். போக்குவரத்து மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில், அதிவேகமாக பஸ்சை இயக்கியதாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்ட நாயக்-கன்பாளையத்தை சேர்ந்த பஸ் டிரைவர் ஜவகர் குமார், 33, மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து அபராதம் விதித்-தனர்.