/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தொடர் முகூர்த்தங்களால் குறையாத காய்கறி விலைதொடர் முகூர்த்தங்களால் குறையாத காய்கறி விலை
தொடர் முகூர்த்தங்களால் குறையாத காய்கறி விலை
தொடர் முகூர்த்தங்களால் குறையாத காய்கறி விலை
தொடர் முகூர்த்தங்களால் குறையாத காய்கறி விலை
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
ஈரோடு : வரத்து சரிந்த நிலையில், தொடர் முகூர்த்தங்களால், ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறையவில்லை.
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் உள்ள, 800 கடைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் காய்கறி, பழங்கள், 1,200 முதல், 1,500 டன் வரை தினமும் வரத்தாகும். கடந்த வாரங்களில் பெய்த மழையால் காய்கறி வரத்து தற்போது, 700 முதல், 800 டன்னாக குறைந்து விட்டது. அதேசமயம் சமீபமாக முகூர்த்த நாட்களாகவும், பள்ளி, கல்லுாரி விடுதிகள் திறப்பாலும் காய்கறி தேவை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமான விலையைவிட பெரும்பாலான காய்கறிகள் கிலோவுக்கு, 10 முதல், 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம் (கிலோ-ரூபாய்): வெண்டை-40, பீர்க்கன்-80 முதல் 90, சின்ன வெங்காயம்-60, பல்லாரி-50, பூண்டு-280, பாகற்காய்-50, சுரைக்காய்-15 முதல், 25, புடலை-40, முருங்கை-120, முள்ளங்கி-40, கத்திரி-40, கேரட்-80, பீன்ஸ், 120 ரூபாய்க்கு விற்பனையானது.பச்சை மிளகாய், 120, கருப்பு அவரை-200, பெல்ட் அவரை-160, பீட்ரூட்-70, கொத்தவரை-60, கோஸ்-40, உருளை-60, மரநெல்லி-80, சேனை-60, கோவக்காய்-80, பட்ட அவரை-180, இஞ்சி, 180, மேரக்காய்-60, குடை மிளகாய்-60, தக்காளி-60, கொத்தமல்லி-60, புதினா கட்டு-10 ரூபாய்க்கும் விற்பனையானது. வரும் வாரங்களில் மழை துவங்கி, காய்கறி வரத்து அதிகரித்தால் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.